கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கிய இருவர் உயிரிழப்பு – முதலமைச்சர் பிறப்பித்த உத்தரவு!
கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கிய இருவர் உயிரிழந்துள்ளதாக தமிழ் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூருக்கு உடனே செல்லும்படி அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று (27.09) கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார்.
கரூரில் விஜயை காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். இதில் பலர் மூச்சு திணறலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.
ஆம்புலன்ஸ் வண்டிகள் பலரை சுமந்து கொண்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மயக்கமடைந்தவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தையொன்றும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரச்சார நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.





