ஐரோப்பிய ஒன்றியத்துடன் 08 மில்லியன் யூரோ பெறுமதியான ஒப்பந்தத்தை கைச்சாடத்திட்ட இலங்கை!
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை அரசாங்கம் 08 மில்லியன் யூரோ பெறுமதியான ஒரு மானிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் EU ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தை ஆதரிக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த மானிய ஒப்பந்தத்தில் அரசாங்கத்தின் சார்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் ஹர்ஷனா சூரியப்பெருமாவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் கார்மென் மொரேனோவும் இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளனர்.
பல்லுயிர் பெருக்கம் இலங்கையின் மிக முக்கியமான சொத்துக்களில் ஒன்றாகும், மேலும் இந்த திட்டத்தின் மூலம் கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதன் மூலம் அதன் பாதுகாப்பை வலுப்படுத்த அரசாங்கம் உறுதிப்பூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





