செய்தி

விமானத்தின் சக்கரப் பகுதியில் அமர்ந்து டெல்லி சென்ற சிறுவன்

விமானத்தின் சக்கரப் பகுதியில் அமர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி சென்ற சிறுவன் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து நேற்று முன் தினம் புறப்பட்ட கே.ஏ.எம். விமானம் இரண்டு நேர பயணத்துக்குப் பிறகு புது டெல்லி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

அந்த விமானத்துக்கு அருகே சிறுவன் ஒருவன் சுற்றித் திரிந்து வருவதைக் கண்ட பாதுகாப்புப் படையினர் அவரைக் கைது செய்து விசாரித்தனர்.

காபூல் விமான நிலையத்துக்குள் நுழைந்து ஆர்வ மிகுதியால் விமானத்தின் நடுப்பகுதி சக்கரம் உள்ள இடத்தில் அமர்ந்து ஒளிந்து கொண்டதாக அந்தச் சிறுவன் தெரிவித்தார்.

சிறுவன் அமர்ந்து வந்த பகுதியில் சோதனை நடத்தியபோது சிறு ஒலிபெருக்கி இருந்தது தெரிய வந்தது. அந்த விமானத்தில் நடத்தப்பட்ட முழு சோதனையில் எந்தவித சதிச் செயலும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அதே விமானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு அந்தச் சிறுவன் திருப்பி அனுப்பப்பட்டதாக இந்திய பாதுகாப்பு வட்டார தகவல்கள் தெரிவித்தன.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி