55 மில்லியன் அமெரிக்கர்களை குறிவைத்துள்ள ட்ரம்ப் நிர்வாகம் – AI மூலம் சோதனை!

55 மில்லியன் அமெரிக்க குடிமக்களின் விசாக்களை பரிசோதனை செய்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் அதிநவீன செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செயற்பாடு பெருமளவில் சுய-நாடுகடத்தலைத் தூண்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வகையான உளவியல் போர் என்று முன்னாள் வெளியுறவுத்துறை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் யாரேனும் விசா காலாவதியாகி தங்கியிருப்பவர்கள் கூட்டாட்சி அரசாங்கத்தால் பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு முன்பு சுய-நாடுகடத்தப்படுவதை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விசாக்களைக் காலாவதியாகி தங்கியிருப்பது, குற்றவியல் நடவடிக்கைகள் அல்லது பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகள் உட்பட நாடுகடத்தலுக்கு வழிவகுக்கும்.
மேலும் சாத்தியமான மீறல்களை அடையாளம் காண அனைத்து விசா வைத்திருப்பவர்களும் ‘தொடர்ச்சியான சோதனையை’ எதிர்கொள்ள நேரிடும் என்பதை வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.