அமெரிக்காவில் 54 ஆண்டுகள் கழித்து பட்டப்படிப்பை முடித்து வியக்க வைத்த நபர்
அமெரிக்காவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 54 ஆண்டுகள் கழித்து பட்டப்படிப்பை முடித்த நபர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த நபர் 1969ஆம் ஆண்டு சேர்ந்த Arthur Ross இந்த ஆண்டு ஒரு வழியாகப் பட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்.
கலையியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்கும் 71 வயது ராஸ் அந்தப் பல்கலையின் ஆக மெதுவான மாணவர் என்று கூறப்படுகிறது. பல்கலையில் சேர்ந்த இரு ஆண்டுகளுக்குப் பின், நடிப்புக் கலையில் தேர்ச்சி பெற அவர் முடிவெடுத்தார்.
அதை முடித்துச் சான்றிதழும் பெற்றார். ஆனால் நடிப்பில் ஈடுபட விருப்பமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டத்துறையில் முயற்சி செய்து பார்க்கலாமே என்ற எண்ணத்தில் அவர் சட்ட கல்லூரிக்கு சென்றுள்ளார்.
அதையும் முடித்து 35 ஆண்டுகளுக்கு வழக்கறிஞராகப் பணியாற்றினார். 2016ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதை முடித்துவிடலாமே என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. மீண்டும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கே சென்றார். அவர் ஒவ்வொரு பாடமாக எடுத்துப் படித்தார்.
6 ஆண்டுகள் கழித்து அண்மையில் அவர் பட்டம் பெற்றார். தமக்குக் கிடைத்த வாய்ப்பை அனுபவித்துப் படித்ததாக அவர் தெரிவித்தார்.