நம்பிக்கை வாக்கெடுப்பை அறிவித்துள்ள பிரான்சின் பிரதமர் – மக்ரோனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!

பிரான்சின் பிரதமர் அடுத்த மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பை அறிவித்துள்ளார்.
இது அவரது மையவாத அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரான்சுவா பேய்ரூ தனது செல்வாக்கற்ற பட்ஜெட் திட்டங்களுக்கு செப்டம்பர் 8 ஆம் திகதி பிரான்சின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையான தேசிய சட்டமன்றத்தில் ஒப்புதல் பெறப் போவதாகக் கூறினார். எதிர்க்கட்சிகள் விரைவில் அதற்கு எதிராக வாக்களிப்பதாக அறிவித்தன.
இந்நிலையில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஒரு வருடத்தில் மூன்றாவது முறையாக ஒரு புதிய பிரதமரை நியமிக்கும் சிக்கலான பணியை விரைவில் எதிர்கொள்ளக்கூடும் என பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பிரான்ஸின் அரசியல் நிலவரங்களின்படி, பிரதமர் பெரும்பாலும் உள்நாட்டுக் கொள்கைகளில் கவனம் செலுத்துகிறார்.
அதே நேரத்தில் ஜனாதிபதி வெளியுறவுக் கொள்கை, ஐரோப்பிய விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் கணிசமான அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.