அமெரிக்காவில் கோர விபத்துக்குள்ளான பேருந்து – ஐவர் பலி

நியூயோர்க்கில் சுற்றுலா பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுள்ளனர்.
விபத்து நயாகரா நீர்வீழ்ச்சியை பார்வையிட்ட பின், சுற்றுலாப் பயணிகள் நியூயோர்க் நகரத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், பபலோவிலிருந்து கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் நிகழ்ந்தது.
பேருந்தில் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த 52 சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். அதிவேகமாக பயணித்த பேருந்து திடீரென வேக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க காவல்துறை சம்பவ இடத்துக்குத் தீவிரமாகச் செயல்பட்டு, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
வெளிநாட்டு ஊடகங்கள் இந்த விபத்து தொடர்பான செய்திகளை முன்னணிப் பிரிவுகளில் வெளியிட்டு வருகின்றன.
(Visited 1 times, 1 visits today)