இலங்கை: Henry Donati க்கும் ஊடகவியலாளருக்கும் இடையே சந்திப்பு!

British High Commission சமாதான அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளுக்கான 1 வது செயலாளர் Henry Donati க்கும் ஊடகவியலாளருக்கும் இடையே சந்திப்பொன்று இடம் பெற்றது.
திருகோணமலை அலஸ்தோட்டம் அமரன்தாபேய் தனியார் விடுதியில் இன்று (18) மாலை இச்சந்திப்பு இடம் பெற்றது.
மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தற்போது மக்கள் அரசாங்கத்திடம் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் காணிப்பிரச்சினைகள் அதிகளவில் இருப்பதாகவும் மக்களுக்கு சிறந்த தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இதன் போது ஊடகவியலாளர் அப்துல்சலாம் யாசீம் கோரிக்கை விடுத்தார்.
மேலும் கடந்த ஆட்சியில் பொலிஸாரின் கெடுபிடிகள் ஊடகவியலாளர்களுக்கு அதிகரித்து காணப்பட்டதாகவும் தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறான சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும், பொலிஸ் திணைக்களம் பொலிஸ் உயர் அதிகாரிகளின் கையடக்க தொலைபேசி மற்றும் வட்சொப் இலக்கங்களை பொதுமக்களுக்கு வழங்கியிருப்பது இன்னும் பொலிஸாரின் கெடுபிடிகளை குறைக்கும் எனவும் அவர் கலந்துரையாடலின் போது British High Commission சமாதான அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளுக்கான 1 வது செயலாளர் Henry Donati யிடம் தெரிவித்தார்.