உக்ரைன்-ரஷ்யா போருக்கு முடிவு – டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைனும் ரஷ்யாவும் குறிப்பிட்ட அளவு நிலப்பகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புட்டினை நேரில் சந்தித்து பேசும் திட்டம் குறித்து டிரம்ப் பேசினார்.
போரை முடிக்க புட்டினிடம் நேரடியாக வலியுறுத்துவேன். இந்த முயற்சிக்காகவே புட்டின் தன்னுடன் சந்திக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.
போர் நிறைவு தொடர்பான ஒப்பந்தத்தில், இரு தரப்பினருக்கும் நன்மைகளும், அதேசமயம் சில சவால்களும் இருக்கும் என்பதை டிரம்ப் தெளிவுபடுத்தினார்.
“இதை முடிக்க புடின் தயாராக இருக்கிறார். அதனால்தான் என்னை சந்திக்க விரும்புகிறார்,” என டிரம்ப் உறுதி தெரிவித்தார்.
(Visited 5 times, 5 visits today)