வரிவிதிப்புகளை தவறாக பயன்படுத்தும் அமெரிக்காவின் அணுகுமுறை – கடும் கோபத்தில் சீனா

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை தடுக்கும் நோக்கில், இந்தியா மீதான வரிகளை 25 சதவீதம் அதிகரிக்கும் உத்தரவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இதனால் இந்திய பொருட்களுக்கான வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்வினையாக, வரிவிதிப்புகளை தவறாக பயன்படுத்துவதற்கு எங்களது எதிர்ப்பு நிலையானதும் தெளிவானதும் ஆகும் என சீனா தெரிவித்துள்ளது..
வரிகளை துஷ்பிரயோகம் செய்வதை சீனா கடுமையாக எதிர்க்கிறது என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டு சீன குடிமக்கள் அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மீறியதாக அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியிருந்தது.
தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக பிரச்சனைகளை அமெரிக்கா அரசியலாக்குவது, அவற்றை ஆயுதங்களாக மாற்றி பயன்படுத்துவது போன்ற செயல்கள் தவறானவை. சீன நாட்டவர்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை அமெரிக்கா பாதுகாப்பது அவசியம் என குவோ ஜியாகுன் கூறினார்.