ஜெட்ஸ்டார் விமானத்தில் மோசமாக நடந்துக் கொண்ட நபருக்கு நேர்ந்த கதி

ஜெட்ஸ்டார் விமானத்தில் இரண்டு பெண்கள் முன் தகாத முறையில் நடந்து கொண்டதாக பீஜி நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானம் மெல்போர்னில் இருந்து பிரிஸ்பேனுக்கு பறந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பின்னர் இரண்டு பெண்களும் வேறு இருக்கைகளுக்கு மாற்றப்பட்டனர். பயணத்தின் மீதமுள்ள நேரம் விமான ஊழியர்களால் அவர் கவனிக்கப்பட்டார்.
பிஜி நாட்டைச் சேர்ந்த அந்த நபர் ஆஸ்திரேலியாவில் வேலை விசாவில் வசிப்பவர் என்பதை நீதிமன்ற ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.
அவர் பிரிஸ்பேன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார், அங்கு வழக்கு ஒகஸ்ட் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், விமானங்களில் இதுபோன்ற தகாத நடத்தையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக ஆஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 10 visits today)