தனியார் ஹோட்டலில் தீ விபத்து

காஞ்சிபுரம் சங்கரமடம் அருகே உள்ள செங்கழுநீர் ஓடை வீதியில் மைசூர் ஆரிய பவன் எனும் பெயரில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் நகரின் முக்கிய பகுதியில் எப்போதும் அதிக கூட்டத்துடன் காணப்படும் இந்த உணவகத்தில் திடீரென சமையல் கட்டில் படிந்திருந்த எண்ணெய் கரைகளில் தீப்பிடித்து எரியத் தொடங்கி உள்ளது.
தீப்பற்றி எரிவது குறித்து உடனடியாக காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறை வீரர்கள் சமயோகிதமாக செயல்பட்டு தீயை அணைத்து, கேஸ் இணைப்புகளையும் துண்டித்ததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தீப்பற்றி எரிந்த உடன் ஹோட்டலில் இருந்தவர்கள் உடனடியாக வெளியே வந்து விட்டதா அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)