இலங்கை WhatsApp பயனாளர்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை

இலங்கை WhatsApp பயனாளர்களுக்கு அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தனிப்பட்ட WhatsApp கணக்குகளை ஹேக் செய்யும் நபர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடி குறித்து பொலிஸார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
WhatsApp கணக்குகளுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை செய்துகொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திட்டமிட்ட குற்றக்கும்பல்கள் வட்ஸ்அப் கணக்குகளை ஹெக் செய்து, அவற்றை பயன்படுத்தி பண மோசடிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக WhatsApp கணக்குகள் திருடப்பட்டவர்கள் தங்கள் கணக்குகளை மீட்டெடுக்க support@whatsapp.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் https://telligp.police.lk வழியாக பொலிஸ் சைபர் குற்றப்பிரிவிலும் முறைப்பாடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.