செய்தி விளையாட்டு

INDvsENG – மூன்றாம் நாள் முடிவில் 96 ஓட்டங்கள் முன்னிலை இந்தியா

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜாக் கிராலே 4 ரன்னில் வெளியேறினார்.

ஜோ ரூட் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஒல்லி போப் சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.

இறுதியில், மூன்றாம் நாளில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டாகினர். சாய் சுதர்சன் 30 ரன்னில் வெளியேறினார்.

மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 47 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி