விளையாட்டு

என்னை 18 ஆண்டுகள் காத்திருக்க வைத்துவிட்டாயே – விராட் கோலியின் நெகிழ்ச்சி பதிவு

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் நிறைவில் 190 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் நிறைவில் 184 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

இந்தநிலையில் பெங்களூரு அணியின் வெற்றி குறித்து விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“ஐபிஎல் கோப்பையே! உன்னைக் கையில் ஏந்திக் கொண்டாட, என்னை 18 ஆண்டுகள் காத்திருக்க வைத்துவிட்டாயே..! இந்த சீசனை வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். பல வருட மன வேதனைகள், ஏமாற்றங்களுக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது. இது கடினமான நேரங்களில் என்னோடு பயணித்த ஆர்.சி.பி ரசிகர்களுக்கானது” என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ