ஐரோப்பா

நடுவானில் விமானக் கழிவறையில் நிர்வாணமாக ஆட்டம் போட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்

சான் ஃபிரான்சிஸ்கோவிலிருந்து லண்டனுக்குச் சென்றுகொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் கழிவறையில் ஊழியர் ஒருவர் நிர்வாணமாக ஆடியது தெரியவந்துள்ளது.

மே 25ஆம்திகதி நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து பிரிட்டிஷ் செய்தித்தாள் ‘தி சன்’ செய்தி வெளியிட்டது. பயணிகளுக்கு உணவு பரிமாற வேண்டிய அந்த 41 வயது ஊழியர் திடீரென காணாமல் போனார்.பின்னர் அவர் விமானக் கழிவறையில் நிர்வாணமாக ஆடிக்கொண்டிருந்ததைச் ஊயிழியரின் மேலாளர் கண்டறிந்தார்.

“வேலை செய்யவேண்டிய நேரத்தில் அந்த நபர் போதை மாத்திரைகளை உட்கொண்டதாகச் சந்தேகிக்கிறோம்,” என்று விமானப் பணியாளர் ஒருவர் கூறியதை தி சன் மேற்கோள் காட்டியது.

பிறகு பைஜாமா உடை அணிந்த அந்தச் ஊழியர், அந்த 10 மணி நேர விமானப் பயணத்தின் எஞ்சிய நேரம் இருக்கையிலேயே அமர்ந்திருந்தார்.

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் விமானத்திலிருந்து காவல்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட அந்தநபர், பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட ஓர் அறிக்கையில், “அவருக்கு மருத்துவக் கவனிப்பு வழங்கப்பட்டதும் அதிகாரிகள் அவரைக் கைதுசெய்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்,” என்றது.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்