இலங்கை தொடருந்து நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பால் இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவை ரத்து

தொடருந்து நிலைய அதிபர்களால் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று இரவு நேர அஞ்சல் தொடருந்துகள் இயங்காது என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக 250 முதல் 270 வரையிலான தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடருந்து பயணச்சீட்டுக்கள் வழங்கப்படாததால் தொடருந்து திணைக்களத்திற்கு சுமார் 3 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
பணியமர்த்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு கோரி தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)