உலகம் செய்தி

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதற்கு முன நாசா வெளியிட்ட புகைப்படம்!

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதற்கு முன்பு விண்வெளியில் தனது குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் உள்ளிட்டோரை பூமிக்கு திரும்ப அழைத்து வர அனுப்பட்ட அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலன் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தது.

டிராகன் விண்கலனில் அவர்கள் பூமி திரும்பவுள்ளனர். சற்று நேரத்தில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படவுள்ளது. இதற்காக பூமி திரும்பவுள்ள வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இதனிடயே பூமி திரும்பும் உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோா்ம், நிக் ஹாவுக், ரஷியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் கோர்புனோவ் உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

சரியாக இன்று மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தையொட்டி கடல் பகுதிக்கு டிராகன் விண்கலம் வந்துசேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படும் காட்சி, பூமிக்கு வந்துசேரும் காட்சிகள் அனைத்து நேரடியாக நாசா ஒளிபரப்பு செய்யவுள்ளது.

(Visited 47 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி