ஐரோப்பா

30 நாள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை : ரஷ்யா சென்றுள்ள ட்ரம்பின் தூதர்!

உக்ரைனில் முன்மொழியப்பட்ட 30 நாள் போர்நிறுத்தம் குறித்த விவாதங்களுக்காக ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப்   மொஸ்கோவிற்கு பயணித்துள்ளார்.

விட்காஃபின் பயணம் “ரஷ்யாவை போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளவும், உக்ரைனுக்கு எதிரான  போரை நிறுத்தவும் அழுத்தம் கொடுப்பதன் ஒரு பகுதியாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் வியாழக்கிழமை மாஸ்கோவிற்கு பயணம் செய்வதை உறுதிப்படுத்தினார்.

இந்த வார தொடக்கத்தில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்க மற்றும் உக்ரைன் அதிகாரிகள் மொத்தம் 30 நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்