இலங்கை செய்தி

பளையில் கிணற்றிலிருந்து ஆசிரியையின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு

கிளிநொச்சி பளை, வேம்படிக்கேணியைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை மயில்வாகனம் எனும் நபருக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து சடலம் ஒன்று வெள்ளிக்கிழமை (7) மீட்கப்பட்டுள்ளது.

துர்நாற்றம் வீசுவதை அறிந்து வெள்ளிக்கிழமை (7) காலை 09.00 மணியளவில் அயலவர்கள் குறித்த கிணற்றை அவதானித்தனர்.

குறித்த கிணற்றை பிரதேசவாசிகள் பரிசோதித்த போது, கிணற்றில் பெண் ஒருவர் சடலமாக காணப்பட்டதை அடுத்து, பிரதேசவாசிகள் இது தொடர்பில் பளை பொலிஸாருக்கு அறிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் சடலமாக காணப்படும் பெண் அதே பகுதியை சேர்ந்த ஆசிரியையான 54 வயதுடைய தவராசசிங்கம் சரஸ்வதியென அடையாளம் காணப்பட்டுள்ளது.

பளை பொலிஸார் சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(Visited 23 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!