அமைச்சருக்கு கால அவகாசம் வழங்கிய சிறீதரன்

தையிட்டி பகுதியில் பொது மக்களுக்கு சொந்தமான காணிக்குள் திஸ்ஸ ராஜ மகா விகாரை என்ற பெயரில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதை அமைச்சர் அறிவாரா என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விகாரை கட்டப்பட்டுள்ள நிலப்பரப்பிற்குள் ஏறத்தாழ 20 பரப்பு காணி உரிமையாளர்கள் விகாரையை அகற்றி தங்களின் நிலங்களை கையளிக்குமாறு நீண்டகாலமாக அகிம்சா வழிப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
ஒரு நோக்கத்திற்காக சுவீகரிக்கப்படும் காணியை இன்னொரு நோக்கத்திற்காக பாவிக்க முடியாது என அமைச்சருக்கு தெரியாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
(Visited 21 times, 1 visits today)