ஜெர்மனியில் அச்சுறுத்தும் போலியோ வைரஸ்கள்- பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஜெர்மனியில் ஒன்பது இடங்களில் உள்ள கழிவுநீரில் போலியோ வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்கள் கடுமையான ஆபத்தைக் குறிக்கின்றன என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்தாலும், நோய்களைக் கண்காணிக்கும் முன்னணி அமைப்புகளான ரொபட் கோர்ச் நிறுவனம் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாடன்-வூர்ட்டம்பேர்க்கிலேயே போலியோ வைரஸ்கள் அதிகமாக இருப்பதை கழிவு நீர் சோதனைகள் இப்போது கண்டறிந்துள்ளன.
போலியோவிற்கான கழிவுநீர் கண்காணிப்பு குறித்த ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக, ரொபர்ட் கோச் நிறுவனம் நடவடிக்கை சோதனைகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த நவம்பர் மாத இறுதியில் இருந்து நிலவும் கழிவுநீரில் போலியோ வைரஸ்கள் குறித்த எங்கள் சந்தேகங்கள் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அனைத்து வயது குடிமக்களும் போலியோவிற்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.