செவ்வந்தியைத் தேடி தேடுதல் வேட்டை

பாதாள தலைவன் கணேமுள்ள சஞ்சீவ கொலையின் சூத்திரதாரி என கூறப்படும் இஷாரா செவ்வந்தி மதுகம ரன்னகல பிரதேச வீடொன்றில் மறைந்து இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து உரிய வீட்டை சுற்றி வளைத்து இராணுவ பொலீஸ் மற்றும் அதிரடிப்படை வீரர்கள் தேடுதல் நடத்தியுள்ளனர்.
“றொமீ ” எனும் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் நடத்தப்பட்ட போதிலும் அவ்வீட்டில் இருந்த எந்தத் தடயத்தையும் பெற முடியவில்லை என மதுகம பொலீசார் தெரிவித்தனர்….
இவ்வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படும் செவ்வந்தி பாதுகாப்பு படை சுற்றி வளைப்பதை அறிந்து காட்டுக்குள் தப்பி சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பிரதேசம் முழுவதும் சல்லடைத் தேடுதல் நடத்தியுள்ளனர்.
அத்துடன் இவருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் உரிய வீட்டில் இருந்த மூவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளதுடன் இவ்வீட்டை சுற்றிப் பொலீசார் காவல் காத்து வருகின்றனர்.