போதகர் ஜெரம் பெளத்த மதத்தை அவமதிக்கிறாரா?
போதகர் ஜெரம் பெர்னாண்டோ பௌத்த மத சீருடை அணிந்த ஒருவர் காணப்படுகின்ற காணொளி ஒன்றை வெளியிட்டு பெளத்த மதத்தையும் அவுத்து பிக்குகளின் காவி உடையையும் அவமதித்துள்ளதாக இன்று ராவணா பலய மற்றும் சிங்கலே அபி அமைப்புக்களின் பௌத்த பிக்குகள் மல்வத்து அஸ்கிரிய மகா விகாரைகளின் பிரதம குரு களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
இந்த காணொளி தொடர்பில் கொழும்பு பேராயர் கார்டினல் ரஞ்சித் அவர்களும் தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயமாக மகாநாயக்கர்கள் இருவரும் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன் இவ்வாறான செயற்பாடுகள் இனங்களுக்கு இடையே மோதல்களை ஏற்படுத்தும் என்பதால் மதப்போதகர்கள் மிகவும் அவதானமாக செயல்பட வேண்டும் எனவும் இவ்விடயமாக வன்முறைகளுக்கு செல்லாமல் சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் முறைப்பாடுகளை சமர்ப்பித்த தரப்புக்களுக்கும் மகாநாயக்கர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
ஜனசெத பெரமுனவுன் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் அவர்களும் மகாநாயக்க தேரர்களிடம் கண்டனம் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.