சூடு பிடிக்கும் கர்நாடகா தேர்தல் களம்!!! பாஜகவை வீழ்த்தும் காங்கிரஸ் – தேர்தல் கருத்து கணிப்பு
கர்நாடகாவில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. கர்நாடக சட்டப் பேரவையின் ஆட்சி காலம் கடந்த மாதம் 24ம் திகதி முடிவடைந்திருந்த நிலையில் நேற்று தேர்தல் இடம்பெற்றிருந்தது.
இந்த தேர்தல் களத்தில் காங்கிரஸ், பாஜக மற்றும் ஏனைய கட்சிகளை சேர்ந்த 2615 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கர்நாடகாவில் பாஜக தற்போது 116 இடங்களுடன் தனிபெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வருகின்றது.
தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், முடிவுகள் எதிர்வரும் 13ம் திகதி வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.
இந்த முடிவுகளின் அடிப்படையில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் 122 தொகுதிகள் முதல் 140 தொகுதிகளிலும் பாஜக 62-80 தொகுதிகளிலும் ஜேடிஎஸ் 20-25 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.