ஆபிரிக்காவை உலுக்கிய சிடோ புயல் – 73 பேர் மரணம்
கிழக்கு ஆபிரிக்காவின் மொசாம்பிக் குடியரசில் சிடோ புயல் 73 பேரைக் கொன்றது.
சூறாவளியின் தாக்கத்தினால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை 543 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய இடர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
24 மணித்தியாலங்களில் மணிக்கு 260 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியதாகவும், சுமார் 250 மில்லிமீற்றர் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அந்நாட்டு அரசாங்கம் 02 அவசர விடுதி நிலையங்களை நிறுவியுள்ளது.
மேலும், சூறாவளியால் சுமார் 2.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
(Visited 1 times, 1 visits today)