இலங்கை செய்தி

தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி| மக்கள் அவதானம்

 

ருமேனியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி கொழும்பு பகுதியில் இளைஞர்களிடம் பணம் பெற்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள 5 இளைஞர்களிடம் பெண் 25 இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

பண மோசடியில் சிக்கிய இளைஞர்கள் பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு அனுப்பிய முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ருமேனியாவில் உள்ள பல்பொருள் அங்காடியில் மாதாந்தம் இரு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபா சம்பளத்திற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி இளைஞரிடம் மோசடி செய்துள்ளார்.

நான்கு மாதங்களாக பணம் பெற்றுக் கொண்ட குறித்த பெண்ணால் ஏமாற்றப்படுவதாகவும் அது மோசடி என்பதை உணர்ந்து முறைப்பாடு செய்ததாகவும் மோசடியில் சிக்கிய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த பெண் குழுவின் கடவுச்சீட்டு மற்றும் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு ஆவணங்களை மறைத்துவிட்டுஅவற்றை மீள தங்களிடம் வழங்குவதை தவிர்த்து வருவதாக குறித்த இளைஞர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதன்படி விசாரணையில் பெண் தொழிலாளர்களை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்ப வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உரிமம் இல்லாமல் இந்த பண மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோசடி செய்த பெண்ணுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு கடந்த 2ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த பெண்ணை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(Visited 16 times, 1 visits today)

priya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை