இலங்கை செய்தி

சுமந்திரனுக்கு பகிரங்க சவால் விட்டுள்ள கீதநாத்

பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொள்ளவில்லை என்பதை சத்தியக்கடதாசி மூலம் வெளிப்படுத்த வேண்டும் என ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த பகிரங்க கோரிக்கையை விடுத்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நான் மதுபானசாலையை எடுக்கவில்லை என்பதை கடந்த வாரம் ஊடக சந்திப்பில் சத்தியக் கடதாசியை காண்பித்து வெளிப்படுத்தியிருந்தேன்.

இதனை ஏனைய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கும் சவாலாக விடுத்திருந்தேன். ஆனால் இதுவரை எவரும் அந்த சவாலை ஏற்று சத்தியக் கடாதாசியை வெளியிடவில்லை.

நாங்கள் அரசியலுக்கு புதிதாகவே வந்தோம். நாம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடாக பல விடயங்களை அறிந்து கொண்டுள்ளேன்.

அந்த வகையில் சுமந்திரன் முன்னுதாரணமாக நடக்க வேண்டும். சுமந்திரன் தான் மதுபான சாலை எடுக்கவில்லை என்பதை சத்திய கடாதாசி மூலம் வெளிப்படுத்த வேண்டும்.

அதேபோல அக்கட்சியில் போட்டியிடும் ஏனைய சக வேட்பாளர்களும் இதனை செய்ய வேண்டும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன் – என்றார்

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை