இந்தியர்களுக்கான வேலை விசாக்களை அதிகரிக்கும் ஜெர்மனி
இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு சென்றிருந்த ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பல திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், இந்தியர்களுக்கான வேலை விசாக்களை அதிகரிப்பதாக ஜெர்மானிய அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆண்டுக்கு 20,000 விசா என்றிருந்த அந்த எண்ணிக்கை இனி 90,000ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“திறமையானவர்களுக்கு ஜெர்மனியின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்,” என்று திரு ஓலாஃப் ஷோல்ஸ் குறிப்பிட்டார்.
ஜெர்மனியின் விசா அதிகரிப்பு இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரும் முன்னேற்றமாக இருக்கும் என்று இந்தியப் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவும் ஜெர்மனியும் மாணவர்கள், வேலை வாய்ப்பு குடியேற்றம் தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
கடந்த ஓர் ஆண்டில் மட்டும் மூன்றுமுறை ஜெர்மன் பிரதமர் இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். இது இரு நாடுகளுக்கு இடையிலான நட்பை வலுப்படுத்தியுள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.