உலகளவில் கடுமையான வறுமையில் 1.1 பில்லியன் மக்கள் – ஐ.நா அறிக்கை
உலகெங்கிலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர் என்று ஐ.நா வளர்ச்சித் திட்ட (UNDP) அறிக்கை தெரிவிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
Oxford Poverty and Human Development Initiative (OPHI) உடன் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 2023 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் அதிக மோதல்களைக் கண்டதால், போரில் உள்ள நாடுகளில் வறுமை விகிதங்கள் மூன்று மடங்கு அதிகமாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
UNDP மற்றும் OPHI ஆகியவை 2010 முதல் ஆண்டுதோறும் தங்கள் பல பரிமாண வறுமைக் குறியீட்டை வெளியிட்டு, 6.3 பில்லியன் மக்களைக் கொண்ட 112 நாடுகளில் இருந்து தரவுகளை சேகரித்து வருகின்றன.
இது போதிய வீட்டுவசதி, சுகாதாரம், மின்சாரம், சமையல் எரிபொருள், ஊட்டச்சத்து மற்றும் பள்ளி வருகையின் பற்றாக்குறை போன்ற குறிகாட்டிகளைப் பயன்படுத்துகிறது.
“மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள ஏழைகளுக்கு, அடிப்படைத் தேவைகளுக்கான போராட்டம் மிகவும் கடுமையான மற்றும் அவநம்பிக்கையான போராகும்” என்று UNDP இன் தலைமை புள்ளியியல் நிபுணர் யான்சுன் ஜாங்குறிப்பிட்டார்.
110 நாடுகளில் உள்ள 6.1 பில்லியன் மக்களில் 1.1 பில்லியன் மக்கள் தீவிர பல பரிமாண வறுமையை எதிர்கொள்கின்றனர் என்ற கடந்த ஆண்டு கண்டுபிடிப்புகளை அறிக்கை எதிரொலித்தது.