உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா
காசா மற்றும் லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
“காசாவில் உடனடி போர்நிறுத்தம், பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவிகள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்,” என்று ஜோகன்னஸ்பர்க்கில் ஆதரவாளர்களுக்கு உரையாற்றிய ரமபோசா தெரிவித்தார்.
அடுத்த சில நாட்களில், பாலஸ்தீனத்தில் நடைபெற்று வரும் இனப்படுகொலைக்கு எதிராக, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக, சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) தனது முழு வழக்கையும் தனது அரசாங்கம் சமர்ப்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“தோழர்களே, லெபனான் போன்ற அருகிலுள்ள நாடுகளில் இஸ்ரேல் நடத்திய குண்டுவெடிப்புகளைப் பற்றியும் நாங்கள் கவலைப்படுகிறோம்,” என்று ரமபோசா தெரிவித்தார்.