மெக்சிகோவில் சாலையில் கண்டெடுக்கப்பட்ட 5 தலையில்லாத உடல்கள்
மத்திய மெக்சிகோவில் ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சாலையில் ஐந்து ஆண்களின் தலை துண்டிக்கப்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜலிஸ்கோ மாநிலத்தில் உள்ள ஓஜுலோஸ் நகருக்கு அருகில்,சடலங்களை ஓட்டுநர்கள் பார்த்ததை அடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண தடயவியல் குழுக்கள் பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களின் வயது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை, மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாலிஸ்கோவில், இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 1,415 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
உலகிலேயே அதிக கொலை விகிதங்களில் ஒன்றான மெக்சிகோவில் ஆண்டுதோறும் 30,000க்கும் அதிகமானோர் கொல்லப்படுகிறார்கள்.
கடந்த வாரம், போதைப்பொருள் வன்முறையால் பாதிக்கப்பட்ட மெக்சிகோ நகரத்தின் மேயர் பதவியேற்ற சில நாட்களில் படுகொலை செய்யப்பட்டார்.
தென்மேற்கு மாநிலமான குரேரோவில் சுமார் 280,000 மக்கள் வசிக்கும் நகரமான சில்பான்சிங்கோவில் அலெஜான்ட்ரோ ஆர்கோஸ் கொல்லப்பட்டார்.