வேலைநிறுத்தத்தை இடைநிறுத்தும் அமெரிக்க கப்பல்துறை தொழிலாளர்கள்
அமெரிக்க கப்பல்துறை தொழிலாளர்கள் மற்றும் துறைமுக ஆபரேட்டர்கள் ஒரு தற்காலிக உடன்பாட்டை எட்டியுள்ளனர், இது மூன்று நாள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறது.
இவர்களது வேலை நிறுத்தம் அமெரிக்காவின் கிழக்கு மற்றும் வளைகுடா கடற்கரைகளில் கப்பல் போக்குவரத்தை நிறுத்தியது, மேலும் பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படும் என்று அச்சுறுத்தியது.
ஒரு கூட்டறிக்கையில், International Longshoremen’s Association (ILA) மற்றும் US Maritime Alliance, தாங்கள் “ஊதியம் குறித்த ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை அடைந்துவிட்டதாக” தெரிவித்தது, என்ன ஒப்புக்கொள்ளப்பட்டது என்பது பற்றிய எந்த விவரங்களையும் வழங்கவில்லை.
“உடனடியாக அமலுக்கு வரும், தற்போதைய அனைத்து வேலை நடவடிக்கைகளும் நிறுத்தப்படும் மற்றும் முதன்மை ஒப்பந்தத்தின் கீழ் உள்ள அனைத்து வேலைகளும் மீண்டும் தொடங்கும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மைனே முதல் டெக்சாஸ் வரையிலான துறைமுகங்களில் ஊதியம் மற்றும் பணிகளை தானியக்கமாக்குவது தொடர்பான சர்ச்சையில் தொழிற்சங்க ஒப்பந்தம் காலாவதியானதை அடுத்து 45,000 துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.





