ரஜினிகாந்தின் வேட்டையன் டிரைலர் வெளியானது.. கொண்டாடும் ரசிகர்கள்
ரஜினிகாந்தின் 170வது படம் வேட்டையன். இப்படத்த த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மலையாள திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாரான மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார்.
வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் 10-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக வேட்டையன் உருவாகி உள்ளதால் இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில் தற்போது வேட்டையன் திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதிரடி சண்டைக் காட்சிகளும், அதகளமான வசனங்களுடனும் கூடிய இந்த வேட்டையன் பட டிரைலரை பார்த்த ரசிகர்கள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை டிரைலர் அதிகரித்துள்ளதாக கூறி வருகின்றனர்.
(Visited 3 times, 1 visits today)