ரஷ்ய அரசு ஊடகம் மீது புதிய தடைகளை விதித்த அமெரிக்கா
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், ரஷ்ய ஊடக சேனல் RTக்கு எதிராக புதிய தடைகளை அறிவித்துள்ளார்,
இது “ரஷ்யாவின் உளவுத்துறை எந்திரத்தின் நடைமுறைப் பிரிவு” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
உயர்மட்ட அமெரிக்க இராஜதந்திரி செய்தியாளர்களிடம் , “அமெரிக்காவில் ஜனநாயகத்தை குழிபறிக்க இரகசியமாக முயன்று வரும் ரஷ்ய ஆதரவு ஊடகங்களின் வலையமைப்பின் ஒரு பகுதியாக RT உள்ளது” என தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு “புதிய தொழில்” அமெரிக்காவில் இருக்க வேண்டும் என்றார்.
ரஷ்யா டுடே (RT) என்று அழைக்கப்பட்ட அரசு ஒளிபரப்பு நிறுவனம், ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் வடக்கு மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளில் “தகவல் நடவடிக்கைகள், இரகசிய செல்வாக்கு மற்றும் இராணுவ கொள்முதல்” ஆகியவற்றில் ஈடுபட்டதாக வெளியுறவுத்துறை குற்றம் சாட்டியது.