கொடிய மூளை தொற்றுக்களை ஏற்படுத்தும் வைரஸ் கண்டுப்பிடிப்பு!
கொடிய மூளை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் தொற்று முதன் முறையாக மனிதர்களிடம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு சீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் உண்ணி கடித்ததில் 61 வயது முதியவர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரை பரிசோதனை செய்தபோது மூளையை பாதிக்கும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தியெடுத்தல் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்ணிக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்யும் சீன ஆராய்ச்சியாளர்களுடன் அவரது நோய் தொற்று பற்றிய விசாரணைக்கு வழிவகுத்தது.
ஜூன் 2019 இல், இன்னர் மங்கோலியாவில் உள்ள ஈரநிலப் பூங்காவில் உண்ணி கடித்த பிறகு ஒரு நோயாளி தொடர்ச்சியான காய்ச்சல் மற்றும் பல உறுப்பு செயலிழப்புடன் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)