விளையாட்டு

மகளிர் T20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெற இருந்தது.

இத்தொடருக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதிப்பெற்ற நிலையில், இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் தகுதிச்சுற்றின் அடிப்படையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெற்றுள்ளன.

மேலும் இத்தொடருக்கான போட்டி அட்டவணையையும் ஐசிசி அறிவித்திருந்தது.

வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்த நிலையில் அங்கு ஆட்சி மாற்றமும் நடந்தது.

இதனையடுத்து மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணியின் துணை கேப்டனாக தஹ்லியா மெக்ராத் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:

அலிசா ஹீலி (கே), டார்சி பிரௌன், ஆஷ்லே கார்ட்னர், கிம் கார்த், கிரேஸ் ஹாரிஸ், அலனா கிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், தஹ்லியா மெக்ராத், சோஃபி மோலினக்ஸ், பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, மேகன் ஷட், அனாபெல் சதர்லேண்ட், டெய்லா விலேமின்க், ஜார்ஜியா வேர்ஹாம்

(Visited 22 times, 1 visits today)

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!