இங்கிலாந்தில் செல்லப் பிராணிகளை வளர்ப்போரின் கவனத்திற்கு!
இங்கிலாந்து – வட அயர்லாந்தில் செல்லப் பிராணிகளை திருடுபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் செல்ல பிராணிகளை திருடுபவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்பதுடன், அபராதமும் விதிக்கப்படும்.
செல்லப்பிராணி கடத்தல் சட்டமானது வரும் ( 24.08) ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.
பூனைகள் மற்றும் நாய்கள் வெறும் பொருள்கள் அல்ல, ஆனால் அவற்றின் உரிமையாளர்கள் அல்லது பாதுகாவலர்களிடமிருந்து திருடப்படும் போது துன்பம் மற்றும் உணர்ச்சி அதிர்ச்சியை அனுபவிக்கும் திறன் கொண்ட உணர்வுள்ள உயிரினங்கள் என்பதை இந்த புதிய சட்டம் அங்கீகரிக்கிறது என்று அரசாங்கம் கூறியுள்ளது.
(Visited 3 times, 1 visits today)