தந்தை சிலையை சேதப்படுத்தியதற்கு நீதி கேட்கும் ஷேக் ஹசீனா

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக ஷேக் ஹசீனா வேறு வழியின்றி தனது பதவியை இராஜினாமா செய்தார்.
பின்னர் இராணுவ உதவியுடன் இந்தியா வந்தடைந்தார்.
இந் நிலையில் ஷேக் ஹசீனா இந்தியா வந்த பிறகு முதன்முறையாக வங்கதேச வன்முறை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ஷேக் ஹசீனா வங்காளதேச வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.
வங்கதேசத்தின் தேசிய தந்தையான எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையை சேதப்படுத்தியதற்கு நீதி வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)