அளவிற்கு அதிகமானால் தண்ணீர் குடித்தால் ஆபத்து – சிறுநீரகம் பாதிக்கப்படலாம்…
தண்ணீர் என்பது வாழ்க்கைக்கு ஆதாரம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. நமது உடல் தோராயமாக 70% தண்ணீரால் ஆனது.
உடல் தட்பநிலையை சீராக வைப்பது முதல், உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை கொண்டு செல்வது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது, செரிமானத்திற்கு இன்றியமையாதது என தண்ணீர் கிட்டத்தட்ட உடல் செயல்பாடுகள் அனைத்திற்கும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது என்பதை மறுக்க இயலாது.
உடலில் நீர் சத்து குறைபாடு ஏற்பட்டால், நொடியில் உடல்நிலை மிக மோசமாக மாறுவதோடு, சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தாக கூட முடியலாம்.
உடலுக்கு மிக மிக அத்தியாவசியமானது என்றாலும், எதுவுமே அளவோடு தான் இருக்க வேண்டும், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. இந்த விதி தண்ணீருக்கும் பொருந்தும். அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்பு வாட்டர் பாய்சனிங் அல்லது வாட்டர் டாக்ஸிடி (Water Toxity or Water Poisoning) என அழைக்கப்படுகிறது. ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத தண்ணீர் உடலுக்கு விஷமாக ஆகிவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நாம் அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது, உடலில் நீர்ச்சத்து அளவு மிகவும் அதிகரித்து, இரத்தத்தில் சோடியத்தின் அளவு மிகவும் குறைந்து விடும். நரம்புகள் மற்றும் தசைகள் சரியாக செயல்பட அத்தியாவசியமான சோடியம் என்னும் கனிம சத்து, நமது உடலுக்கு மிக முக்கியம். உடலில் சோடியம் அளவு குறைந்தால் அது ஹைபோநெட்ரீமியா என அழைக்கப்படுகிறது. இதை பொதுவாக வாட்டர் டாக்ஸிட்டி அல்லது வாட்டர் பாய்ஸனிங் என அழைப்பார்கள். மேலும் அளவிற்கு அதிகமான தண்ணீர் குடிப்பதால், சிறுநீரகங்களும் பாதிக்கும். சிறுநீரகங்களுக்கு வேலை பளு அதிகமாகி (Kidney Health) பலவீனமடையும் வாய்ப்பு உண்டு.
வாட்டர் டாக்ஸிட்டி ஏற்பட்டதற்கான என்னும் நீர் நச்சுத்தன்மை ஏற்பட்டதற்கான அறிகுறிகள்
1. அளவிற்கு அதிகமான வாந்தி, தலைவலி, அளவிற்க்கு அதிகமான கோபம் அல்லது குழப்பம், தசைகள் பலவீனம், தலை சுற்றல் ஆகியவை தண்ணீர் நச்சு ஏற்பட்டதற்கான அறிகுறிகள்.
2. தண்ணீர் நச்சுத்தன்மை ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டியவை
3. அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். தாம் எடுத்தால் தண்ணீர் குடிக்கலாம்.
4. கோடை காலத்தில் பொதுவாக வியர்வை அதிகமாக உள்ள நேரங்களில் நீர்ச்சத்து குறையும் என்பதால், அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றாலும், நாள் முழுவதும் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.
5. உடல்நல சிகிச்சையில் இருப்பவர்கள், நோய்க்கான சிகிச்சை பெறுபவர்கள், தங்கள் மருத்துவரிடம் நாளொன்றுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம் என்பதை கேட்டு அறிந்து கொண்டு குடிப்பது நல்லது.
6. தண்ணீர் அருந்தும் போது சரியான இடைவெளியில், குடிப்பது நல்லது, சிலர் நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காமல், திடீரென, மளமளவென்று ஒரு லிட்டர் 2 லிட்டர் தண்ணீரை குடிப்பார்கள். இதனால் சிறுநீரகம் பாதிப்படைவதோடு மட்டுமல்லாமல், கல்லீரல் மற்றும் இதய செயல்பாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
7. அதே போன்று உடற்பயிற்சிக்குப் பிறகும், திடீரென அதிக அளவு தண்ணீர் குடிப்பது தவறு. சிறிது சிறிதாக அருந்துவது நல்லது.
8. சுகாதார நிபுணர்கள், சாதாரண உடல்நிலை உள்ள ஒரு நபர், தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம் என்று கூறுகின்றனர். இந்த தண்ணீரை, ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளாமல் போதுமான அளவு இடைவெளியில் அவ்வப்போது குடிப்பது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.