இத்தாலியில் நீருக்கடியில் கண்டுப்பிடிக்கப்பட்ட ரோமானிய வில்லா!
இத்தாலியின் நேபிள்ஸ் அருகே நீருக்கடியில் ஒரு பண்டைய ரோமானிய வில்லா கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
Campi Flegrei தொல்பொருள் பூங்காவின் அறிக்கையின்படி, வண்ணமயமான பளிங்கு மொசைக், கட்டிடத்தின் நுழைவாயிலில் உள்ள ரோமானிய காலத்தின் பிற்பகுதியில் உள்ள தாழ்வாரத்தின் அல்லது “ப்ரோடிரோ” பகுதியாக இருந்திருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆடம்பரமான வில்லா பண்டைய ரோமின் லாஸ் வேகாஸ் என்று அழைக்கப்படும் பண்டைய நகரமான பையாவில் அமைந்துள்ளது.
ரோமானியப் பேரரசின் பிற்பகுதியில், ஜூலியஸ் சீசர் மற்றும் நீரோ போன்ற முக்கிய நபர்கள் இந்த நகரத்தில் வீடுகளை வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இது குடிப்பழக்கம், விருந்துகள் மற்றும் பொது மகிழ்ச்சியை விரும்பும் பிரபுக்களின் இடமாக அறியப்படுகிறது.