October 28, 2025
Breaking News
Follow Us
இலங்கை செய்தி

இபங்கையில் வன வளம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

உலகில் 30 வீதமான வன அமைப்பு பேணப்படும் மூன்று நாடுகளில் இலங்கையும் ஒன்று என அரசாங்க கணக்கு குழுவில் தெரியவந்துள்ளது.

இலங்கை தவிர்ந்த தென்கொரியா, ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகளே இவ்வாறான வன அமைப்பை பேணி வருவதாக வனவள திணைக்கள அதிகாரிகள் குழுவில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக நாடுகளில் காடுகளின் சதவீதம் 31% ஆகக் கருதப்படுகிறது, இந்த நாட்டில் காடுகள் 30% அளவில் இருப்பது மிகவும் நல்ல நிலைமை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இலங்கையின் முழு வன அமைப்பையும் வர்த்தமானியில் வெளியிடாதது குறித்து குழு அதிகாரிகளிடம் கேட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டளவில், சுமார் 1.4 மில்லியன் ஹெக்டேர் காடுகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன, மேலும் 250,000 ஹெக்டேர் காடுகள் வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை.

அதற்கிணங்க, அந்த அனுமதி பெறாத காடுகளை விரைவில் வர்த்தமானியில் வெளியிட குழுவின் தலைவர் பணிப்புரை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை