இளைஞர் தொடர்பில் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள கனடா பொலிஸார்
கனடாவின் மாண்ட்ரீல் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரின் சடலம் ரொறன்ரோவில் மீட்கப்பட்ட நிலையில், பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
ரொறன்ரோவில் ஞாயிறன்று பகல் வழிபோக்கர் ஒருவரால் 18 வயது ஜாக்ரி ராம்நாத் என்பவரின் சடலம் அடையாளம் காணப்பட்டது. இந்த நிலையில் உள்ளூர் பொலிஸார் தெரிவிக்கையில், ஜாக்ரி ராம்நாத் என்ற இலைஞரை மர்ம நபர்கள் இலக்கு வைத்து கொன்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், 16 வயது ஏசாயா லியோபோல்ட் ரோச் என்ற சிறுவனின் கொலையில் தற்போது ரொறன்ரோவில் சடலமாக மீட்கப்பட்ட ஜாக்ரி ராம்நாதுக்கும் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்ட்ரீலுக்கு மேற்கு ஏப்ரம் 17ம் திகதி ஏசாயா லியோபோல்ட் ரோச் என்ற சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யார்க் பிராந்திய பொலிசார் தெரிவிக்கையில், இந்த இரு இளைஞர்களின் மரணத்திலும் தொடர்பு இருப்பதாக தற்போது உறுதி செய்ய முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ரோச் கொலை தொடர்பான விசாரணையில் புதிதாக எதுவும் பதிவு செய்ய இல்லை என்று கியூபெக் மாகாண பொலிஸார் புதன்கிழமை தெரிவித்தனர். இதனிடையே, ராம்நாதின் சொந்த மாகாண அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் திரட்டப்படும் என ஒன்ராறியோ அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும் தங்களின் விசாரணை துவக்க கட்டத்தில் இருப்பதாகவும், மேலதிக தரவுகளை தேடி வருவதாகவும் ஒன்ராறியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.