பிரித்தானியாவில் பெண்ணுக்கு மறதி நோயால் ஏற்பட்ட பரிதாப நிலை

பிரித்தானியாவின், வேல்ஸில் 91 வயதுப் பெண்மணி முள் கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் 28ஆம் திகதி அடல் எட்வர்ட்ஸ் என்ற அந்தப் பெண்மணியை வீட்டில் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு முதுமை மறதி நோய் இருந்தது. மறுநாள் அவர் ஊருக்கு வெளியே உள்ள ஒரு திடலில் காணப்பட்டார்.
ஓய்வுபெற்ற தாதியான எட்வர்ட்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இம்மாதம் 12ஆம் திகதி அவர் காயங்களால் உயிரிழந்ததாக குறிப்பிட்டது.
அவர் உடல்வெப்பக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதிக அளவு ரத்தம் இழந்திருந்ததாகவும் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
அவரின் மரணத்திற்குக் காரணம் காலில் இருந்த புண்ணில் ஏற்பட்ட தொற்று என்று கூறப்பட்டது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
(Visited 27 times, 1 visits today)