பிரான்ஸில் பேருந்து ஒன்றை திருட முயற்சித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி
பிரான்ஸில் பேருந்து ஒன்றை திருட முற்பட்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
19 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவ்லின் நகரில் வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Keolis நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து ஒன்றை குறித்த இளைஞன் திருட முற்பட்டுள்ளார்.
தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றை நள்ளிரவு 1.30 மணி அளவில் திருட முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தரிப்பிட பாதுகாவலர் அவரை அடையாளம் கண்டு, பொலிஸாரை அழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் முன்னதாக 2022 ஆம் அண்டிலும் பேருந்து ஒன்றை திருடியிருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருந்தார்.
(Visited 20 times, 1 visits today)





