இலங்கை : வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்பு திரும்புபவர்களுக்கு விசேட ரயில் சேவைகள்!
வெளி மாகாணங்களில் இருந்து கொழும்பு திரும்பும் மக்களுக்காக இன்று பிற்பகல் முதல் மேலதிக புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் திரு.நந்தன இண்டிபோலகே தெரிவித்தார்.
அதன்படி இன்றும் நாளையும் பதுளை, காலி மற்றும் பெலியத்த புகையிரத நிலையங்களில் இருந்து கொழும்பு கோட்டை வரை 8 மேலதிக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இது தவிர நாளை மறுதினம் 16ஆம் திகதி முதல் அலுவலக ரயில் பயணங்கள் வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)





