மீரா ஜாஸ்மின் வீட்டில் திடீர் மரணம்…

பிரபல தென்னிந்திய நடிகை மீரா ஜாஸ்மின் தந்தை வயது மூப்பு காரணமாக, உயிரிழந்துள்ள நிலையில் இவருக்கு ரசிகர்கள் தங்களின் ஆறுதலை கூறி வருகிறார்கள்.
மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் பிலிப் அவருக்கு வயது 83. கடந்த சில வருடங்களாகவே முதுமையால் ஏற்பட கூடிய நோய்களுக்கு ஆளாகி, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மரணம் அடைந்தார்.
இவரது மனைவி பெயர் எலியம்மா ஜோசப். இவருக்கு பேர் ஜிபி சாரா ஜோசப், ஜெனி சாரா ஜோசப், ஜார்ஜ், ஜாய் மற்றும் மீரா ஜாஸ்மின் என ஐந்து பிள்ளைகள். இவர்களில் மீரா ஜாஸ்மின் தான் கடைசி மகள்.
ஜோசப் பிலிப் இறுதி சடங்குகள் இன்று நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், தந்தையை இழந்த நடிகை மீரா ஜாஸ்மினுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களின் ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.
(Visited 25 times, 1 visits today)