காஸாவில் விமானத்தின் மூலம் நிவாரணப் பொருட்கள் – ஹமாஸ் விடுக்கும் கோரிக்கை
கஸாவில் விமானத்தின் மூலம் காஸாவில் நிவாரணப் பொருள்களைப் போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.
மேற்கத்திய நாடுகள் விமானங்களிலிருந்து போடப்பட்ட நிவாரணப் பொருள்கள் காஸாவின் கடலில் விழுந்தன. அவற்றை எடுப்பதற்காகச் சென்ற 12 பேர் தண்ணீரில் மூழ்கினர்.
ஆகாயத்திலிருந்து நிவாரணப் பொருள்களைப் போடுவது தவறான அணுகுமுறை, அதில் பயனில்லை என்று ஹமாஸ் கூறியது.
தரை வழியாக நிவாரணப் பொருள்களை அனுமதிக்க வேண்டும் என்று உதவிக் குழுக்களுடன் அதிகாரிகளும் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
காஸாவின் சில பகுதிகளில் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.
நிவாரணப் பொருள்களைக் கொண்டுசெல்வதைத் தடுப்பதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுக்கிறது. உதவிக் குழுக்கள் முறையாகச் செயல்படவில்லை என்றும் அது சாடுகிறது.
(Visited 6 times, 1 visits today)