விளையாட்டு

IPL Match 07 – குஜராத் அணிக்கு 207 ஓட்டங்கள் இலக்கு

ஐபிஎல் தொடரின் இன்றைய 7வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா- ருதுராஜ் களமிறங்கினர். ருதுராஜ் 1 ரன்னில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தமிழக வீரர் சாய் கிஷோர் மிஸ் செய்தார்.

முதல் ஓவரில் 2 ரன்களை மட்டுமே எடுத்த சிஎஸ்கே அதன்பிறகு அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

20 பந்துகளில் 46 ரன்கள் குவித்த ரச்சின் எதிர்பாரதவிதமாக ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனால் பவர்பிளே முடிவில் சிஎஸ்கே அணி 1 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த ரகானே 12 ரன்னிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ருதுராஜ் 46 ரன்னிலும் வெளியேறினார்.

இதனையடுத்து துபே- மிட்செல் ஜோடி சேர்ந்து குஜராத் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசினார். 5 சிக்சர்களை பறக்கவிட்ட துபே அரை சதம் கடந்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்த வந்த இளம் வீரர் ரிஸ்வி அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் சாய் கிஷோர், ஜான்சன், மோகித் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்

(Visited 4 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content