மருமகளை நினைத்து பெருமைப்படும் மன்னர் சார்ல்ஸ்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தமது மருமகளின் தைரியத்தை நினைக்கும்போது தமக்குப் பெருமையாய் இருப்பதாகப் பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் குறிப்பிட்டார்.
பிரித்தானிய இளவரசி கேட் மிடல்டன் (Kate Middleton), ஆரம்பக்கட்ட புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெறுவதாக அறிவித்தார்.
அதைப் பற்றி இளவரசி தைரியமாகப் பொதுமக்களிடம் பேசியது பெருமையாக இருக்கிறது என்று மன்னர் சார்ல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இளவரசி பேசிய காணொளிக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 6 வாரங்களுக்குமுன் மன்னர் சார்ல்ஸுக்குப் புற்றுநோய் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
(Visited 11 times, 1 visits today)